ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீத்தை உயர்த்தும் வகையில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி நேப்லா தெரு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு டி.இ.ஓ., ரேணுகோபால் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி தமிழ் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர்த்துவதன் அவசியம் குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.