உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மொபைல் போன் திருட முயன்ற வாலிபர் கைது

மொபைல் போன் திருட முயன்ற வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மொபைல் போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி, அடுத்த கரியலுாரை சேர்ந்தவர் சந்திரன் மகன் பாக்கியராஜ்,28. இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அங்கேயே தங்கியுள்ளார். கடந்த 17ம் தேதி இரவு 11:30 மணியளவில் துாங்கி கொண்டிருந்த பாக்கியராஜின் சட்டையில் இருந்த 'ரியல் மீ' மொபைல்போனை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள், மர்மநபரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், தேவபாண்டலத்தை சேர்ந்த பஷீர் மகன் ேஷக்பாபு,29; என்பது தெரிந்தது. இதயைடுத்து ேஷக்பாபுவை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை