உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது போதையில் தகராறு செய்து, கார் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.விருகாவூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலகிருஷ்ணன், 32; டிரைவர். இவர், ேஹாண்டா சிட்டி காரில் கடந்த 27ம் தேதி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் சென்றார். அங்கு, கள்ளக்குறிச்சி, கவரைத் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் வினோத்குமார், 22; மதுபோதையில் ராஜா, 45; இளவசரன்,38; ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு, திட்டி தாக்கினார்.அப்போது, பாலகிருஷ்ணன் ஓட்டி சென்ற காரின் முன்பக்க கண்ணாடியை வினோத்குமார் உடைத்தார்.இது குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி