உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு தமிழ் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நல்லாப்பிள்ளை, ராமலிங்கம், விஜயகுமார், ராசகோபால் முன்னிலை வகித்தனர். ஆசிரியரை பத்மலோச்சனி வரவேற்றார். தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரைமுருகன், பி.டி.ஏ., தலைவர் துரைராஜ், தலைமை ஆசிரியை சரண்யா வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சியில், திருவள்ளுவர் நாள், விருது வழங்குதல் மற்றும் புலவர் அய்யா மோகனுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது. தொடர்ந்துபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஸ்ரீதரன், தேவேந்திரன், ராமகிருஷ்ணன், அனுசல்யா, வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர். கவுரவ விரிவுரையாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை