மேலும் செய்திகள்
மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா
02-Sep-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் இன்னர்வீல் கிளப் சார்பில் மனைவி நல வேட்பு நாள் விழா, அறக்கட்டளையின் 3ம் ஆண்டு துவக்க விழா, ஞானஆசிரியர் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. நிர்வாக அறங்காவளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மனைவியின் மதிப்பு மற்றும் தியாகம் என்ற தலைப்பில் தங்கவேல் சிறப்புரையாற்றினார். விழாவில், தொழிலதிபர் ஜனார்த்தனன், இன்னர்வீல் கிளப் தலைவி இந்துமதி மற்றும் இன்னீர்வீல் கிளப் நிர்வாகிகள், மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 250 தம்பதியினர் பங்கேற்று மலர்கள் மற்றும் பழங்கள் பரிமாறிக் கொண்டனர். அறக்கட்டளை பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
02-Sep-2025