உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

ரிஷிவந்தியம்; சூளாங்குறிச்சியில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி பாலாஜி திருமண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு 11ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை மூலவர் மற்றும் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வரதராஜ பெருமாள் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று திருமண மண்டபத்திற்கு எழுதருளினார். அங்கு விழா மேடையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி நிறுவனர் செந்தில்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை