உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மளிகை கடையில் பணம் திருட்டு

மளிகை கடையில் பணம் திருட்டு

சின்னசேலம்: சின்னசேலம் அருகே, மளிகை கடையில் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தை சேர்ந்தவர் புக்காராம் மகன் மோதிலால் குவாத், 39; அதே பகுதி கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில், அவரது கடைக்கு பொருட்கள் வாங்க ஒரு நபர் வந்தார். அப்போது, மோதிலால் குவாத் பொருட்களை எடுக்க கடைக்கு உள்ளே சென்றார். இதை பயன்படுத்தி கொண்ட அந்த நபர், கல்லாப்பெட்டியில் இருந்த, ரூ.10 ஆயிரத்தை திருடி தப்பி சென்றார். கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ