உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில அளவிலான வில்வித்தை போட்டி திருக்கோவிலுார் மாணவர்கள் வெற்றி

மாநில அளவிலான வில்வித்தை போட்டி திருக்கோவிலுார் மாணவர்கள் வெற்றி

திருக்கோவிலுார் : மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் திருக்கோவிலுார் மாணவர்கள் மு தல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர். திருவள்ளூர் மாவட்ட இன்டோர் மற்றும் அவுட்டோர் வில்வித்தை அசோசியேஷன் சார்பில், திருவள்ளூர் அடுத்த காக்களூர் அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது . இதில், திருக்கோவிலுார் ஏ.எஸ்.டி.சி., ஸ்போர்ட்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் சென்டர் வில்வித்தை பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர். 13 வயது உடையவர்களுக்கான 10 மீட்டர் பிரிவில், திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர் விஜய், 10 வயதுடையவர்களுக்கான 6 மீட்டர் பிரிவில் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் ரிஹான், சரஸ்வதி வித்யாலயா பிரைமரி பள்ளி மாணவர் ரிஹான் முதலிடம் பிடித்தனர். அதேபோல் 11 வயதுடையவர்களுக்கான 20 மீட்டர் பிரிவில் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர் பீர் கான், சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் அமீர்கான், 15 வயதுடையவர்களுக்கான 10 மீட்டர் பிரிவில் ஜி.அரியூர் அரசு மாதிரி பள்ளி மாணவர் சாய் பிரசாத் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் முன்னாள் முப்படை வீரர் நலச்சங்க தலைவர் முஜீர்கான் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை