உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுவர்கள் பிரச்னையை தட்டி கேட்டு தகராறு; பெற்றோர் இருவர் கைது

சிறுவர்கள் பிரச்னையை தட்டி கேட்டு தகராறு; பெற்றோர் இருவர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பள்ளி சிறுவர்கள் பிரச்னையில் மோதிக்கொண்ட பெற்றோர் இருவரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் அடுத்த ஏரவலம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மணிகண்டன், 32; இவரது 2 குழந்தைகள் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அதேபோல் கட்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் செந்தில், 37; இவரது 2 குழந்தைகளும் அதே பள்ளியில் படிக்கின்றனர். நேற்று காலை சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பெற்றோர்கள் மணிகண்டன், செந்தில் இருவரும் பள்ளியின் முன்பாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை