தியாகதுருகம் ஜமாபந்தி : 202 கோரிக்கை மனு
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தியில், 202 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தியாகதுருகம் குறு வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் தியாகதுருகம் குறு வட்டத்திற்குட்பட்ட வீரசோழபுரம், பிரதிவிமங்கலம், வடதொரசலுார், அந்தியூர், குன்னியூர், உதயமாம்பட்டு, பெரியமாம்பட்டு, மேல்விழி, தென்னேரிக்குப்பம், திம்மலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து, 202 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா மாறுதல் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.தாசில்தார் பசுபதி, கலெக்டர் அலுவலக மேலாளர் இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.