உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்; தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் நிமலன் தலைமை தாங்கினார்.இதில் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டு மற்றும் 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் வரதராஜன், வட்ட செயலாளர் தஸ்தகிர், துணை தலைவர் பிரபாகரன், பொருளாளர் கீதா, அமைப்பு செயலாளர் குமார், கோமதி, புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர். முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ