ரேஷன் அரிசி கடத்துவதாக வீடியோ விற்பனையாளர் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட ரேஷன் கடையில் அரிசி மூட்டைகள் கடத்தி, பைக்கில் கொண்டு செல்லப்படுவதாக சமூக வலைதளங்களில் நேற்று வீடியோ வைரலானது.இதையொட்டி, கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி தாசில்தார் சரவணன் சம்மந்தப்பட்ட ரேஷன் கடையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அதில், கடையில் உள்ள இருப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் அளவு குறித்து சோதனை செய்தார்.இதற்கிடையே கள்ளக்குறிச்சி ரேஷன் கடை விற்பனையாளர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, கருணாபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதேபோல், கருணாபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் மணிமொழி கள்ளக்குறிச்சி ரேஷன் கடைக்கு பணியிட மாற்றம் செய்து, கூட்டுறவு சங்க செயலாளர் கலைச்செல்வன் உத்தரவிட்டார். ரேஷன்அரிசி கடத்தப்பட்டது உறுதியானால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள் தனி தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.