உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  2.16 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்  

 2.16 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.1,773.63 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகள் திறந்து வைத்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் கனவு இல்லம் திட்ட வீடுகள், முதல்வரின் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் வீடுகள், மேல்நிலைத் நீர்தேக்க தொட்டிகள், இலங்கை அகதிகள் முகாமில் புதிய வீடுகள், நியாய விலைக் கடைகள் உட்பட 100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 2,525 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். பள்ளி கல்வி துறை சார்பில் 81 கோடியே 59 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டடங்கள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை குடிநீர் திட்ட பணி 6 கோடியே 62 லட்சம் மதிப்பில் திறந்து வைக்கிறார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பிலான 250 மெட்ரிக் டன் விதை சேமிப்பு கிடங்கினை திறந்து வைக்கிறார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சங்கராபுரம் பேரூராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான புதிய பேரூராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சிகள் துறை உட்பட பல்வேறு துறைகள் மூலம் 386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் 62 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 1,773 கோடியே 63 லட்சம் மதிப்பில் 2,559 முடிவுற்ற திட்ட பணிகள் திறந்து வைத்தும், 62 புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டி, 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்கிடையே கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் புதியதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். மேலும், உளுந்துார்பேட்டையில் ரூ.1,350 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தோல் இல்லா காலணி தொழிற்சாலையை பார்வையிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி