உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த, 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளுடன் கல்லுாரி, இயங்கி வருகிறது.இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இந்த கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால், மாணவர்கள் விளையாடவும், பயிற்சி மேற்கொள்ளவும், இங்கு முறையான விளையாட்டு மைதானம் இல்லை.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' கல்லுாரியில் போதிய விளையாட்டு மைதானம் இருப்பின், மாணவர்கள் தீவிர பயிற்சிகளுடன் மேலும் பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை