உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பழுதான பி.எஸ்.என்.எல்., டவர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழுதான பி.எஸ்.என்.எல்., டவர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் துருப்பிடித்து பழுதான பி.எஸ்.என்.எல்., டவர் உடைந்து விபத்து ஏற்படும் முன் அதனை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் சேலம் - சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையோரம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மைக்ரோவேவ் டவர் மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளது.தொலைத்தொடர்பு துறையின் நெட்ஒர்க்குகள் மைக்ரோவேவ் முறையில் இணைக்கப்பட்டிருந்தபோது இந்த அலுவலகம் கள்ளக்குறிச்சியில் நிறுவப்பட்டு அதற்கான டவர் இங்குஅமைக்கப்பட்டது.ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தால், மைக்ரோவேவ் முறை கைவிடப்பட்டு. ஓ.எப்.சி., எனும் ஆப்டிகல் பைபர் கேபிள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மைக்ரோவேவ் கட்டுப்பாட்டு அறையும், டவரும் பராமரிப்பின்றி பயனற்று போனது. டவர் முழுதும்துருப்பிடித்து பலமிழந்துள்ளது.தற்போது இந்த கட்டுப்பாட்டு அறை மட்டும், மாவட்ட தோட்டக்கலைத்துறையின் இயக்குனர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.ஆனால், விண்ணை முட்டும் அளவிற்கு 100 மீட்டருக்கும் மேல் உயரம் கொண்ட இந்த டவர் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பழுதடைந்து இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உள்ளது.இதனால் நாள்தோறும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே பாதுகாப்பாற்ற பி.எஸ்.என்.எல்., டவரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி