மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன
30-Sep-2025
கள்ளக்குறிச்சி; பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நிலம் அளவீடு தொடர்பாக அலுவலர்களிடம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கச்சிராயப்பாளையம் அடுத்த பாதரம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 50; இவர் நேற்று பகல் 12.30 மணிக்கு தனது மனைவி சவுமியாவுடன், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, நிலத்தை அளவீடுசெய்ய பணம் செலுத்தி பலமுறை மனு அளித்தும் அளவீடு செய்யவில்லை என கூறிய சவுமியா திடீரென டி.ஆர்.ஓ., ஜீவா உள்ளிட்ட அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதனம் செய்து வெளியே அழைத்து வந்து விசாரித்தனர். கணவர் வெங்கடேஷின் பூர்வீக சொத்து இடத்தை அளந்து தரக்கோரி சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் பணம் செலுத்தி பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் அளவீடு செய்யாமல் தொடர்ந்து அலைக்கழித்து வருவதாகவும், தங்களின் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். போலீசார் தம்பதியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
30-Sep-2025