உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து: பெண் பலி

பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து: பெண் பலி

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் பெண் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சிவா, 25; அஞ்சல் அலுவலர். இவர் கடந்த 6ம் தேதி தியாகதுருகம் அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு பைக்கில்,தாய் செல்வியை,47; அழைத்து சென்றார்.திருவிழா முடிந்து இரவு 8:00 மணிக்கு வீடு திரும்பியபோது தியாகதுருகம் புறவழிச்சாலையில் புக்குளம் மேம்பாலம் அருகே, இருவரும் வந்த பைக் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும், வழியிலேயே செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த சிவா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை