உள்ளூர் செய்திகள்

கார் மோதி பெண் பலி

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே கார் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தியாகதுருகம் அடுத்த உதயமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி சந்திரா,52; இவர் நேற்று காலை 6.30 மணியளவில் சேலம் - சென்னை புறவழிச்சாலையை கடந்து செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த ரேஞ்ச்ரோவர் கார், நின்றிருந்த சந்திரா மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த சந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சூர் மாவட்டம், புன்னையூர் பகுதியை சேர்ந்த அந்தோணி மகன் பிரான்சிஸ் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ