மேலும் செய்திகள்
புகார் பெட்டி - கள்ளக்குறிச்சி
01-May-2025
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அடுத்த பு.மலையனுார் சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி ராஜேஸ்வரி,34; இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சொந்த ஊரான கடலுார் மாவட்டம் ஐவது குடியில் நடந்த திருவிழாவிற்கு சென்றார். கடந்த, 10ம் தேதி சொந்த வேலை காரணமாக, வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ்சில் வந்தார்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பகல் 1:20 மணிக்கு இறங்கி, அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, 9 சவரன் மற்றும் ரூ.500 திருடு போனது தெரிந்தது. புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
01-May-2025