பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபருக்கு வலை
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே துாங்கிய பெண்ணிடம் தாலிச் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ரஞ்சிதா, 21; இவர் உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் காந்தி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தவர், நேற்று முன்தினம் துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து ரஞ்சிதா அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.ரஞ்சிதா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.