துாக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்த பாரதி மனைவி அஸ்வினி,19; இருவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு நவ., மாதம் திருமணம் முடிந்து ஆண் குழந்தை உள்ளது. அஸ்வினி தேவக்கோட்டையைச் சேர்ந்து நபருடன் மொபைல்போனில் பேசி பழகி வந்தார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு அஸ்வினி தனது கணவரை பிரிந்து தேவக்கோட்டை நபருடன் சென்றார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அஸ்வினி மீண்டும் தென்கீரனுாரில் உள்ள கணவர் பாரதி வீட்டிற்கு வந்து தங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பாரதி வீட்டில் துாங்கில் தொங்கியபடி அஸ்வினி சடலம் இருந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அஸ்வினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, அஸ்வினி தாய் கலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமான 3 ஆண்டில் பெண் இறந்ததால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.