மேலும் செய்திகள்
லாரி மோதி கூலி தொழிலாளி பலி
18-Sep-2025
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே குடும்ப பிரச்னையில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தியாகதுருகம் அடுத்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஏழுமலை, 27; இவரது மனைவி மாணிக்கவள்ளி,18; இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. நேற்று காலை 7: 00 மணிக்கு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மாணிக்கவள்ளியை கத்தியால் ஏழுமலை தாக்க முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தினர். இதனால் மனமடைந்த மாணிக்கவள்ளி ஏழுமலை வெளியே சென்றதும் காலை 8:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
18-Sep-2025