உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் பிரேமா, 23; இவர் கடந்த 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து பிரேமாவின் தந்தை பெரியசாமி போலீசில் புகார் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி