உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு கல்வராயன்மலையில் வாலிபர் கைது

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு கல்வராயன்மலையில் வாலிபர் கைது

கச்சிராயப்பாளையம்: கல்வராயன்மலையில் 800 லிட்டர் சாராய ஊறல்களை அழித்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கல்வராயன்மலையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மணிபாரதி, மணிகண்டன் மற்றும் போலீசார் கடந்த 29ம் தேதி அருவங்காடு மேற்கு மலைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 4 பிளாஸ்டிக் பாரல்களில் வைத்திருந்த 800 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர். தனிப்படையினர் அளித்த தகவலின் பேரில், கள்ளச்சாராயம் காய்ச்சிய அதே ஊரைச் சேர்ந்த ராமன் மகன் அண்ணாமலை, 25; என்பவர் மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் தலைமறைவான லட்சுமணன் மகன் மணி என்பரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை