வாலிபர் தற்கொலை
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் பாலாஜி, 24; நேற்று முன்தினம் இரவு இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் பாலாஜியை அடித்து விட்டதால், இரவு 8:30 மணி அளவில் வீட்டிற்கு வந்த பாலாஜி கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின்விசிறியில் புடவையால் துாக்கில் தொங்கினார். உடனடியாக கீழே இறக்கி திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.