உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.21.50 லட்சம் கையாடல் பெண் கணக்காளர் மீது புகார்

ரூ.21.50 லட்சம் கையாடல் பெண் கணக்காளர் மீது புகார்

சென்னை, முடி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், பெண் கணக்காளர் 21.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.பொன்னேரி அழிஞ்சம்வாக்கத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 39. இவர், தி.நகர் மேட்லி சாலையில் உள்ள, 'ராஜ் ஹேர் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி வருகிறார்.இந்த நிறுவனத்தில் மூத்த கணக்காளராக சென்னை, மணலிபுதுநகரைச் சேர்ந்த மலர், 34, என்பவர், கடந்த 2018 முதல்- 2022 வரை, நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். சமீபத்தில், நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது, நிறுவனத்திற்கு வந்த காசோலை மற்றும் பணம் ஆகியவற்றை, மலர் தன் வங்கி கணக்கிற்கு மாற்றி, 21.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் ராதாகிருஷ்ணன், மாம்பலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ