| ADDED : ஜூலை 16, 2024 01:07 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்,கலெக்டர் வளாக கூட்ட அரங்கில், கலெக்டர் கலைச் செல்வி தலைமையில் நேற்று, நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கை தொடர்பாக 381 பேர் மனு அளித்திருந்தனர்.மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.நேற்று நடந்தகூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில், சர்ச்சில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உறுப்பினர் நல வாரிய அடையாள அட்டையை காஞ்சிபுரம் கலெக்டர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.