உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதை மாத்திரை கடத்தல் ரவுடிகள் உட்பட 4 பேர் கைது

போதை மாத்திரை கடத்தல் ரவுடிகள் உட்பட 4 பேர் கைது

தண்டையார்பேட்டை, : தண்டையார்பேட்டை, கைலாசம் தெருவில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, தண்டையார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணையில், திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த 'புறா' கார்த்திக், 25, இவரது கூட்டாளிகளான செங்குன்றத்தைச் சேர்ந்த, 'மண்ட' தினேஷ், 26, எண்ணுார், வள்ளுவர் நகரைச் சேர்ந்த அப்துல் கரீம், 24, அத்திப்பட்டு புதுநகரைச்சேர்ந்த மதன்குமார், 18 ஆகிய நான்கு பேர் சிக்கினர்.இவர்களில், கார்த்திக், தினேஷ் மற்றும் அப்துல் கரீம் மீது கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் ஆந்திரா மாநிலம் சென்று, அங்கு 10 போதை மாத்திரைகளை 250 ரூபாய்க்கு வாங்கி வந்து, இங்கு 10 மாத்திரைகளை, 1,000 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு வழக்கு பதிந்து, நால்வரையும் கைது செய்து, 4,185 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை