உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் சேகரிப்பு இல்லாத 40 ஆயிரம் வீடுகள்

மழைநீர் சேகரிப்பு இல்லாத 40 ஆயிரம் வீடுகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்வதால், நீர்நிலைகள் நிரம்புவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர காரணமாக அமைகிறது.ஆனால், கான்கிரீட் வீடுகள் அதிகளவில் உள்ள காஞ்சிபுரம் நகரில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு தேவையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு, ஆயிரக்கணக்கான வீடுகளில் இல்லாததால், நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு சிரமம் ஏற்படுகிறது.மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற துறைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு பற்றிய விழிப்புணர்வு பணிகளையும், அதை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளும் போதிய அளவில் மேற்கொள்ளாததால், மழைநீர் சேகரிப்பு அமைப்பை புதிதாக கட்டும் வீடுகளில் கூட பலர் அமைப்பதில்லை.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 62,707 குடியிருப்புகளில், 20,158 குடியிருப்புகளில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளது.காஞ்சிபுரத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் இன்னும் மழைநீர் சேகரிப்பு அமைப்பே இல்லை என்பது தெரியவந்துள்ளது.நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு, மழைநீர் சேகரிப்பு அமைப்பை அனைத்து குடியிருப்புகளிலும் ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை