உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருத்தணியில் ஒரே நாளில் 85 ஜோடிகளுக்கு திருமணம்

திருத்தணியில் ஒரே நாளில் 85 ஜோடிகளுக்கு திருமணம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 120க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இதுதவிர சிலர், வேண்டுதலுக்காக கோவிலில் திருமணம் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று மலைக்கோவிலில் 40 திருமணங்களும், தனியார் திருமண மண்டபங்களில் 45 திருமணங்களும் நடந்தன.திருமண வரவேற்பு மற்றும் முகூர்த்தத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர், திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் மலைக்கோவிலில் பொதுவழி தரிசனத்தில், பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.கோவிலுக்கு வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்களால் திருத்தணி நகரம், சித்துார் சாலை, கமலா தியேட்டர் ஆகிய இடங்களிலிருந்து ம.பொ.சி., சாலை, அரக்கோணம் சாலை, முருகன் கோவில் மலைப்பாதை ஆகிய பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ