மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
13 hour(s) ago
விவசாயிகள் தின விழா
13 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
13 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை நான்குமுனை சந்திப்பு அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களாக குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடுகிறது.குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் அரிப்பு காரணமாக சாலை சேதமடைந்துள்ளது. இதனால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை நான்குமுனை சந்திப்பில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago