உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகன நிறுத்தமாக மாறிய பஸ் நிறுத்தம் சுங்குவார்சத்திரத்தில் ஷேர் ஆட்டோ அடாவடி

வாகன நிறுத்தமாக மாறிய பஸ் நிறுத்தம் சுங்குவார்சத்திரத்தில் ஷேர் ஆட்டோ அடாவடி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் - காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் - மப்பேடு சாலைகள் இணையும் இடத்தில், சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பு உள்ளது.இங்கு, தனியார் மருத்துவமனை, உணவகம், பூக்கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு, பல்வேறு தேவைக்காக, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் இருக்கும் இந்த சந்திப்பில், நான்கு சாலைகளிலும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இங்குள்ள கடைகளுக்கு வருவோர், தங்களின் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை சாலையில் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். மேலும், தனியார் ஆட்டோக்கள் வரிசைகட்டி நிறுத்தப்படுகின்றன.இதனால், சாலையின் அகலம் குறைந்து, இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை 'பீக் ஹவர்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.மேலும், இவ்வழியாக செல்லும் பேருந்து, லாரி மற்றும் கனரக வாகனங்கள், எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரசும்போது, வாகன ஓட்டிகளுக்கிடையே தகராறும் ஏற்பட்டு வருகிறது.சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், போலீஸ் உதவி மையம் இருந்தும், சாலையில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்த போலீசார் அக்கறை காட்டுவதில்லை.எனவே, விபத்துகளை தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கவும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்கள் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி