உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு 38; மாற்றுத்திறனாளி. நேற்று, பிரபு தன் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அசோகன், 60, என்பவரை பின்னால் அமர வைத்து கொண்டு, வாலாஜாபாத்- - ஒரகடம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, வாலாஜாபாத் மின் அலுவலகம் அருகே சென்றபோது, ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த சுதர்சன், 29, என்பவர், இயக்கி வந்த, 'பல்சர்' இருசக்கர வாகனத்தோடு மாற்றுத்திறனாளி பிரபுவின் வாகனம் மோதியதுஇதில் காயம் அடைந்த மூன்று பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாற்றுத்திறனாளி பிரபு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை