உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தமிழருவி மணியன் பெயரில் போலி முகநுால் கணக்கு

தமிழருவி மணியன் பெயரில் போலி முகநுால் கணக்கு

காஞ்சிபுரம்:காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட தலைவர் பெத்ராஜர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,சண்முகத்திடம் நேற்று மனு அளித்திருந்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் பெயரில் போலி முகநுால் பக்கம் தமிழருவி மணியா என்ற பெயரில், அவரின் புகைப்படத்துடன் காமராஜர் மக்கள் கட்சியின் பதாகைகள் பயன்படுத்தி, அவரின் பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.இந்த போலி முகநுால் பக்கம் செயல்பாடு காரணமாக, கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.இந்த முகநுால் கணக்கின் நோக்கமாக, தலைவரை இழிவுபடுத்த வேண்டும் என்பதே ஆகும். எனவே, இதன் பின்னணியை ஆராய்ந்து, போலி முகநுால் கணக்கு துவங்கி இழிவுபடுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை