உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எதிர்ப்பு கவுன்சிலருக்கு பணிகள் குழு தலைவர் பதவி காஞ்சி மேயர் மகாலட்சுமிக்கு புதிய தலைவலி

எதிர்ப்பு கவுன்சிலருக்கு பணிகள் குழு தலைவர் பதவி காஞ்சி மேயர் மகாலட்சுமிக்கு புதிய தலைவலி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி பணிகள் குழு தலைவராக கவுன்சிலர் கார்த்திக் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் எதிர்ப்பு கவுன்சிலரான கார்த்திக்கிற்கு, மாவட்ட செயலர் சுந்தரின் ஆதரவோடு, முக்கிய பதவி வழங்கியிருப்பது, மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என, விமர்சனம் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, தி.மு.க.,- - அ.தி.மு.க.,- - சுயேச்சை என 33க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

நெருக்கடி

மேயர் மகாலட்சுமி மீதும், அவரது கணவர் யுவராஜ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஜூலை 29ல், நடந்த நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு எந்தவொரு கவுன்சிலரும் வராததால், மேயர் மகாலட்சுமி மீதான தீர்மானம் தோல்வியடைந்ததால், மேயர் பதவியில் அவர் தொடர்கிறார்.மேயர் மீதான பிரச்னைகள் ஆறு மாதம் முன் துவங்கும் போதே, மாநகராட்சியின் பணிகள் குழு தலைவரான, 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுரேஷூக்கு, தலைவர் பதவியை ராஜினாமா செய்ய, கட்சி சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.மேயர் ஆதரவாளரான இவருக்கு, நெருக்கடி அதிகரிக்கவே தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 6 மாதங்களாக இப்பதவி காலியாக இருந்தது.இதையடுத்து, 48வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்ட தி.மு.க., கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக சில மாதமாகவே கடுமையாக போராட்டம் நடத்தி வந்தனர்.நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தில் காலியாக இருந்த பணிகள் குழு தலைவர் பதவிக்கான தேர்தல், கமிஷனர் செந்தில்முருகன் தலைமையில், அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. இப்பதவியை மீண்டும்சுரேஷுக்கு கொடுப்பார்களா அல்லது மேயர் எதிர்ப்பு கவுன்சிலரான கார்த்திக்கு கொடுப்பார்களா என எதிர்பார்க்கப்பட்டது.

மாவட்ட செயலர் ஆதரவு

மாவட்ட செயலர் சுந்தரின் ஆதரவாளரும், மேயரின் எதிர்பாளருமான 48-வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், பணிகள் குழு தலைவராக போட்டியிட்டார். இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 6 பேரில், சுரேஷ் இக்கூட்டத்திற்கு வரவில்லை.உறுப்பினர்கள் அன்பழகன், ஷர்மிளா, ஜோதிலட்சுமி, கவுதமி ஆகிய நான்கு பேர், கார்த்திக்கிற்கு ஓட்டளித்து, ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர். பணிகள் குழு தலைவராக தேர்வு செய்ததற்கான உத்தரவை, கமிஷனர் செந்தில்முருகன் கார்த்திக்கிடம் வழங்கினார்.மேயர் எதிர்ப்பு கவுன்சிலரான கார்த்திக்கிற்கு, மாநகராட்சி நிர்வாகத்தின் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இது, மேயர் மகாலட்சுமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும்.பணிகள் குழு என்பது,மாநகராட்சி நிதியில் மேற்கொள்ளப்படும் சாலை, கட்டடம், பராமரிப்பு, குடிநீர் போன்ற பணிகளில், எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து டெண்டர் விடுவது போன்றவையாகும். ஒப்பந்ததாரர்களிடம் நேரடி தொடர்பு இருக்கும்.மேயர் மகாலட்சுமியை எதிர்த்து போரட்டம் நடத்திய முக்கிய கவுன்சிலரான கார்த்திக்கிற்கு, மாவட்ட செயலர் சுந்தரின் ஆதரவோடு பணிகள் குழு தலைவர் பதவி வழங்கியிருப்பது, மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என, விமர்சனம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை