உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரவில் மாடு மீது மோதிய பைக் பணி முடிந்து வீடு திரும்பியவர் பலி

இரவில் மாடு மீது மோதிய பைக் பணி முடிந்து வீடு திரும்பியவர் பலி

குன்றத்துார்:பூந்தமல்லி, திருவெங்கடம் நகரைச் சேர்ந்தவர் மோகன், 45. இவர், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வண்டலுார் - --மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துாரில்இருந்து பூந்தமல்லி நோக்கி சென்றார்.மலையம்பாக்கம் பகுதியை கடந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த மாடு மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மோகன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

வெறும் கண்துடைப்பு

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:மாடுகளை வைத்து பராமரித்து வருவோர், அவற்றை சாலைகளில் விடுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால், பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை.மக்களின் உயிரை காவு வாங்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய மாநகராட்சி, ஒவ்வொரு சம்பவங்களின்போது கண்துடைப்புக்கு மட்டுமே, நடவடிக்கை எடுக்கின்றனர். அதற்குபின் கண்டுகொள்வதில்லை.சென்னையில் அதிகாலை முதல் இரவு வரை, ஒரு ரவுண்டு போனாலே, சாலையில் சுற்றித்திரியும் ஆயிரக்கணக்கான மாடுகளை சிறைபிடிக்கலாம்.குறிப்பாக சென்னையில் பிரதான பகுதிகளில் ஒன்றான கோயம்பேடிற்கு சென்றாலே வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் நுாற்றுக்கணக்காகன எருமை மற்றும் பசு மாடுகளை சிறைபிடிக்கலாம். ஆனால், மாநகராட்சி இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்கிறது. இதுவே, தொடரும் உயிர்பலி சம்பவங்களுக்கு காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி