உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலத்திலிருந்து குதித்தவருக்கு எலும்பு முறிவு

பாலத்திலிருந்து குதித்தவருக்கு எலும்பு முறிவு

சென்னை : கோயம்பேடு மெட்ரோ ரயில் பாலத்திலிருந்து குதித்தவர், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோயம்பேடு மெட்ரோ ரயில் பாலத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார், 36, என்பவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை