உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலத்தில் வளர்ந்துள்ள செடி விரிசல் விடும் அபாயம்

பாலத்தில் வளர்ந்துள்ள செடி விரிசல் விடும் அபாயம்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலையில், வெள்ளைகேட் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக, பெங்களூரு, வேலுார், காஞ்சிபுரம் மார்க்கத்தில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து, வேலுார், பெங்களூரு, ஓசூர் ஆகிய பகுதிக்கு பல்வேறு வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.இருப்பினும், வெள்ளைகேட் மேம்பாலத்தின் இருபுறமும், அரசமரச் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கின்றன. நேற்று முன்தினம் ஒரு பகுதியில் இருந்த செடிகளை அகற்றினர். மற்றொரு பகுதியில், அரசமரச் செடிகளை அகற்றவில்லை.இதனால், மேம்பாலம் வலுவிழந்து, விரிசல் விடும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் இடையே புலம்பல் எழுந்துள்ளது.எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், வெள்ளைகேட் மேம்பால சுவரில் இருக்கும் அரசமரச் செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி