மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
19 hour(s) ago
விவசாயிகள் தின விழா
19 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
20 hour(s) ago
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் பழையசீவரம் பகுதி உள்ளது. பழையசீவரத்தில் இருந்து, பாலாற்றின் குறுக்கே திருமுக்கூடல் பகுதியை இணைக்கும் பாலம் உள்ளது.திருமுக்கூடல் மற்றும்சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த பாலத்தின் வழியாக பயணித்து, பாலாற்றங்கரையையொட்டி உள்ள பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்திற்கு வருவர்.அங்கிருந்து பேருந்து பிடித்து, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை முதல், இரவு 10:00 மணி வரை மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.இப்பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை, சாலை விரிவாக்க பணியின் போது இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதையடுத்து நிழற்குடை வசதியின்றி பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.தற்போது கோடைக்காலம் என்பதால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் வெயில் நேரங்களில் மிகவும் அவதிபடுகின்றனர். எனவே, பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago