உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் பாதை தெருவை தார் சாலையாக்க கோரிக்கை

மண் பாதை தெருவை தார் சாலையாக்க கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து, அப்பகுதி பிரதான சாலைக்கு செல்லும் சாலை மண் பாதையாக உள்ளது.அப்பகுதியினர், இந்த பாதையை பயன்படுத்தி, சாலவாக்கம், உத்திரமேரூர், திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலை மண் பாதையாக உள்ளதால் மழைக்காலங்களில் சேறாக மாறி விடுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, காவணிப்பாக்கத்தில் இருந்து அப்பகுதி பிரதான சாலைக்கு செல்லும் மண் பாதையை, தார் சாலை அல்லது சிமென்ட் சாலையாக சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி