உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரண்டே மாதங்களில் புட்டுக்கொண்ட நிழற்குடை

இரண்டே மாதங்களில் புட்டுக்கொண்ட நிழற்குடை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் கட்டுமானங்கள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.பரந்துார் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, சுகாதாரத்துறை அனுமதியின்றி எம்.பி., நிதியில் பேருந்து நிழற்குடை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தில், எம்.பி., செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியில், 10 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, கடந்த மார்ச் 15ம் தேதி, தேர்தல் தேதி அறிவிக்கும் ஒரு நாள் முன்னதாக அவசர, அவசரமாக திறக்கப்பட்டது.இந்த நிழற்குடையில் பொருத்தப்பட்டுள்ள மின் விசிறி ஓடாமலும், மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால், அரைகுறை பணிகளோடு திறக்கப்பட்டதாக பயணியர் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், நிழற்குடை திறக்கப்பட்டு, இரு மாதங்களே ஆன நிலையில், நிழற்குடையின் சிமென்ட் பூச்சு நேற்று முன்தினம் உதிர்ந்து விழுந்தது.பயணியர் தலையில் விழாமல் தப்பியதால், யாருக்கும் பாதிப்பில்லை. தரமற்ற கட்டுமான பணிகள் மேற்கொண்டிருப்பதாக, காஞ்சிபுரம் நகர மக்கள் விமர்சனம் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை