உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதுார்:மயிலாடுதுறை மாவட்டம், மூவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 27. ஸ்ரீபெரும்புதுார், வெங்கடேஷ்வரா நகரில் தங்கி வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, அதே அறையில் தங்கியுள்ள நண்பரான, தர்மபுரி மாவட்டம், பென்னகரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 21 , உடன், 'டி.வி.எஸ்.,' ஸ்கூட்டரில், சிங்கபெருமாள் கோவில் உள்ள நண்பரை பார்க்க சென்றனர்.ஸ்கூட்டரை வெங்கடேசன் ஓட்டி வந்தார். ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், சால்காம் தொழிற்சாலை அருகே வந்த போது, கட்டுபாட்டை இழந்த ஸ்கூட்டர், எதிரே வந்த ‛ஈச்சர்' வாகனம் மீது மோதியது.இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டதில், வெங்டேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேஷ் பலத்த காயமடைந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை