உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாடின்றி வீணாகும் சுகாதார வளாகம்

பயன்பாடின்றி வீணாகும் சுகாதார வளாகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புத்தளி அடுத்துள்ளது அப்பையநல்லுார் கிராமம். இக்கிராமத்தில், 20 ஆண்டு களுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.துவக்கத்தில் அப்பகுதி பெண்கள் அதை பயன் படுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து அந்த வளாகத்திற்குள் இருந்த சிறு மின்விசை பம்பு மற்றும் கைப்பம்பு போன்றவை பழுது காரணமாக தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது.இதனால், நாளடைவில் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் போனது. தற்போது முறையான பராமரிப்பின்மை காரணமாக இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.எனவே, இப்பகுதி ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீர் செய்து தண்ணீர் உள்ளிட்ட தேவையான வசதிகள் ஏற்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை