உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அப்துல்கலாம் நினைவு தினம் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

அப்துல்கலாம் நினைவு தினம் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

காஞ்சிபுரம்:டாக்டர் கலாம் வழியில் 'உதவும் கரங்கள்' அமைப்பு சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஒன்பதாம்ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் திருக்காலிமேடில் உள்ள அலுவலகத்தில் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் துாவி அஞ்சலி நேற்று செலுத்தப்பட்டது.வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் அரசு நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் வையாவூர் சாலையில், நிழல் மற்றும் பழம் தரும் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.ஏவுகணை மாதிரி அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.காஞ்சிபுரம் --- வையாவூர் சாலையோரம் விதைப்பந்து துாவப்பட்டது. சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை