உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இலை கருகல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

இலை கருகல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

ஊவேரி:காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி மற்றும் வேளியூர் ஆகிய கிராமங்களில், இலை கருகல் மற்றும் குருத்து பூச்சி தாக்குதல் குறித்து, விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது.கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் நாராயணன் இலை கருகல் நோயை கட்டுப்பத்த ஆலோசனைகள் வழங்கினர்.குறிப்பாக, ஸ்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்கிளின் கலவையை, 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிக்குளோரைடு 500 கிராம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலமாக ஒரு ஏக்கருக் தெளிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இதில், காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார், வாலாஜாபாத் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரபாகரன் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை