| ADDED : ஏப் 16, 2024 06:55 AM
காஞ்சிபுரம் : தமிழகம் முழுதும் வரும் 19ம் தேதி, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு பணியாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு 1,700 ரூபாயும், கடைநிலை ஊழியர்களுக்கு 700 ரூபாய் வரை, ஊதியம் ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் பணி நாள், ஓட்டு எண்ணும் நாள் ஆகிய நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் கணக்கீடு செய்து, 1.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,800 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் பணி நாள், ஓட்டு எண்ணும் நாள் ஆகிய நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் கணக்கீடு செய்து, 1.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், 10,798 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.