உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜூன் மாதமும் மாநகராட்சி கூட்டம் பெப்பே! மேயர்-, கவுன்சிலர்கள் மோதலால் தொடர்ந்து முடக்கம்

ஜூன் மாதமும் மாநகராட்சி கூட்டம் பெப்பே! மேயர்-, கவுன்சிலர்கள் மோதலால் தொடர்ந்து முடக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள், செயல்பாடுகள், செலவினங்கள் என, மாநகராட்சியின் அனைத்து பணிகளும் மேயர், கவுன்சிலர்கள் பங்கேற்கும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும்.இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய இக்கூட்டம், அவசியம் கருதி மாதம் ஒருமுறை கூட நடத்தப்படுவது உண்டு.இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிந்து, அதற்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் முடிந்த பிறகும், மாநகராட்சி கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால், மக்கள் நல பிரச்னைகளை பேச முடியவில்லை என கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மாநகராட்சியின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் தாமதமாகி வருவதாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேயர் மகாலட்சுமியை மாற்றக்கோரி, அவருக்கு எதிராக காங்., துணை மேயர் குமரகுருநாதன், தி.மு.க.,- - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 33 பேர், போர்க்கொடி துாக்கியுள்ளனர்.நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும், கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்துள்ளனர். மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலேயே, மாநகராட்சி கூட்டம் நடத்தாமல் தாமதம் செய்வதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மார்ச் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டமும், கவுன்சிலர்கள் வெளிநடப்பு காரணமாக, தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் போனது.அடுத்ததாக, ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் காரணமாக கூட்டம் நடத்தப்படவில்லை. ஜூன் மாதம் மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேயர் - கவுன்சிலர்கள் மோதல் பிரச்னை காரணமாக, கூட்டம் நடத்தாமல் தள்ளி போவதால், மாநகராட்சி பணிகள் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை