வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சி பெற விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம், நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டம், 18 -- 35வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, தொழில்வாய்ப்புக்கு தகுதியானவர்களாக உருவாக்கும் திட்டம். குறுகிய கால பயிற்சி வழங்கி, தொழில் சந்தையில் அவர்களை தகுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தரம் வாய்ந்த பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தில் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet / இணையதளம் வாயிலாக, இத்திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மேலும், பிரதம மந்திரிபயிற்சி திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம்; முதன்மை தனியார்நிறுவனங்களுடன் இணைந்து வங்கி, நிதிச் சேவைகள், தகவல், மென் பொருள் மேம்பாடு, உற்பத்தி மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில், 12 மாத கட்டணமில்லா பயிற்சியை அரசுவழங்குகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டய படிப்பு மற்றும் பட்ட படிப்பு முடித்த, 21 - 24 வயது வரை உள்ள மாணவ - மாணவியர் இதில் பங்கேற்கலாம்.காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி, ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம்,உத்திர மேரூர் மீனாட்சியம்மன் தொழில்நுட்ப கல்லுாரி, வாலாஜாபாத் தொழிற்பயிற்சி நிலையம், கீழம்பியில் உள்ள திருமலை தொழில்நுட்ப கல்லுாரி, ஐயங்கார்குளம் பல்லவன் தொழில்நுட்ப கல்லுாரி ஆகிய இடங்களில், மார்ச் 5 - 12 வரை சேர்க்கை முகாம் நடை பெறும்.இதில், இளைஞர்கள் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.