| ADDED : ஜூலை 08, 2024 05:24 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுயஉதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் அரசு துறைகள், அரசு திட்டங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் தணிக்கையில் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு, ஜூலை 12க்குள் அனுப்ப வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.