உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சர்ச் பணியாளர்கள் வாரியத்தில் விண்ணப்பிக்கலாம்

சர்ச் பணியாளர்கள் வாரியத்தில் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்:தமிழகத்தில் உள்ள சர்ச்சுகளில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்ல பணியாளர்கள் ஆகியோரின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேர, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, பல்வேறு அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும் எனவும், நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயனடையலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்